ஏரி பாசன சங்க தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் தொடங்கியது


ஏரி பாசன சங்க தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் தொடங்கியது
x

விழுப்புரம் கோட்டத்தில் ஏரி பாசன சங்க தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் தொடங்கியது

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளை விவசாயிகளே பாதுகாத்திடும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏரி பாசன சங்க தேர்தல் நடத்தப்பட்டு அதில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி விழுப்புரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வராகநதி உபவடிநில கோட்டத்திற்குட்பட்ட 32 ஏரிகள், தென்பெண்ணையாறு உபவடிநில கோட்டத்துக்குட்பட்ட 10 ஏரிகள் என மொத்தம் 42 ஏரிகளுக்கு தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்தல் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஒவ்வொரு ஏரிகளுக்கும் அந்த ஏரிநீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் விவசாயிகள் தலைவர், உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர் என்பதால் அவர்கள் தலைவர், உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுவினை கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான பரிசீலனை 6-ந்தேதி நடக்கிறது. இதில் தகுதியில்லாத மனுக்கள் நீக்கம் செய்யப்பட்டு இறுதிப்பட்டியல் அன்று வெளியிடப்படுகிறது. தொடர்ந்து போட்டியிருக்கும்பட்சத்தில் 14-ந்தேதியன்று தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story