கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் புருசோத்தமன் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் கவரில் எடுத்து வந்த முடியை நுழைவு வாயில் முன்பு தரையில் வைத்து கற்பூரம் ஏற்றி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளை அவதூறாக பேசிய வேளாண்மை துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story