கோவிலம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி


கோவிலம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி
x

கோவிலம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலியானார்.

சென்னை

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் சிமெண்டு கிடங்கில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷேக் சம்சுதீன் (வயது 28) என்பவர் கடந்த ஒரு ஆண்டாக அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் கிடங்கின் முகப்பில் பெயர் பலகையை சரி செய்யும் பணியில் ஷேக் சம்சுதீன் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்த மின்கம்பத்தில் உள்ள மின்கம்பியில் கை உரசியதால் மின்சாரம் தாக்கி ஷேக் சம்சுதீன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story