விவசாய வேலைகளில் கால் பதிக்கும் வடமாநில தொழிலாளர்கள் - ஒரே நாளில் 8 ஏக்கர் நெல் நடவு செய்து அசத்தல்


விவசாய வேலைகளில் கால் பதிக்கும் வடமாநில தொழிலாளர்கள் - ஒரே நாளில் 8 ஏக்கர் நெல் நடவு செய்து அசத்தல்
x

குளித்தலையில் வடமாநில தொழிலாளர்கள் ஒரே நாளில் 8 ஏக்கர் வரை நெல் நடவு செய்து வருகின்றனர்.

கரூர்,

குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு நடவு முறையில் பயிர் சாகுபடி செய்யப்படுவதால், அதிகளவில் பணி ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

ஆனால் 100 நாள் வேலை திட்டத்தின் காரணமாக, அப்பகுதியில் உள்ள பெண்கள் விவசாய பணிக்கு வருவதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும், அப்படியே பணிக்கு வந்தாலும், அதிகளவில் கூலி கேட்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வடமாநில ஆண் தொழிலாளர்களை கொண்டு பயிர் சாகுபடி செய்து வருவதாகவும், அவர்கள் ஒரு ஏக்கருக்கு பயிர் பறிக்க, நடவு செய்ய குறைந்த அளவிலேயே ஊதியம் பெறுவதாகவும், அதுமட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 8 ஏக்கர் வரை நேர்த்தியாக நடவு செய்து அசத்தி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.


Next Story