10 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது


10 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது
x

10 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவள்ளி தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவத்தன்று திருச்சி ஜங்ஷன் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த வடமாநில வாலிபர் பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவர் ஒடிசா மாநிலம் நல்குண்டா பகுதியை சேர்ந்த ெஜகபந்து நாயக்(வயது 32) என்பதும், இவர் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் ஒடிசாவில் இருந்து ஈரோட்டுக்கு சென்றபோது, வழியில் திருச்சி வந்த அவர் ரெயில் புறப்பட நேரம் ஆனதால் ஈரோட்டுக்கு பஸ்சில் செல்ல வெளியே வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.


Next Story