திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற 31-ந்தேதி வரை நெல்லையில் இருந்து புறப்படும் என அறிவிப்பு


திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற 31-ந்தேதி வரை நெல்லையில் இருந்து புறப்படும் என அறிவிப்பு
x

திருச்செந்தூர்-நெல்லை இடையே ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. மேலும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மழை மற்றும் வெள்ளம் காரணமாக திருச்செந்தூர்- நெல்லை இடையிலான ரெயில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், திருச்செந்தூர்-நெல்லை இடையே ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற 31-ந்தேதி வரை நெல்லையில் இருந்து புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, திருச்செந்தூர் அதிவிரைவு ரெயில், வருகிற 31-ந்தேதி வரை நெல்லை ரெயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்றும், எழும்பூரில் இருந்து வரும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், நெல்லை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


Next Story