அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்குப்போட்டு தற்கொலை


அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்குப்போட்டு தற்கொலை
x

கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு

கல்பாக்கம்,

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சன்தவா (வயது 34). கல்பாக்கம் அணு ஆராய்ச்சி பிரிவில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். நெய்குப்பி பகுதியில் உள்ள அணுபுரம் குடியிருப்பில் வசித்து வந்தார். அஞ்சன்தவாவின் மனைவி பி.எட் படிப்பு படிப்பதற்காக 1½ ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அஞ்சன்தவா மட்டும் அணுபுரம் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது மனைவி தினமும் தொலைபேசி மூலம் அவரிடம் பேசி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வழக்கம்போல் அஞ்சன்தவாவிடம் பேச விரும்பிய மனைவி செல்போன் மூலம் பலமுறை அழைத்தார். அஞ்சன்தவா செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி அணுபுரம் குடியிருப்பில் உள்ள பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் தனது கணவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. ஆகவே வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறினார்.

அவர்கள் சென்று பார்த்தபோது வீட்டு படுக்கை அறையில் உள்ள மின்விசியில் அஞ்சன்தவா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதை பார்த்த அவர்கள் சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கும், அவரது மனைவிக்கும் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அணுபுரம் குடியிருப்புக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட அஞ்சன்தவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அணு விஞ்ஞானி ஏன்? என்ன காரணத்துக்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story