மோட்டார் சைக்கிளில் சென்றபோது மரத்தில் மோதி அணு ஆராய்ச்சி மைய ஊழியர் சாவு


மோட்டார் சைக்கிளில் சென்றபோது மரத்தில் மோதி அணு ஆராய்ச்சி மைய ஊழியர் சாவு
x

மோட்டார் சைக்கிளில் சென்றபோது மரத்தில் மோதி அணு ஆராய்ச்சி மைய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வந்தவர் சிற்றரசு (வயது 41). வெங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது சொந்த வேலை காரணமாக அணுபுரம் சென்று விட்டு திருக்கழுக்குன்றம் சாலை வழியாக வெங்கப்பாக்கம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி மோதியதில் தலையில் பலத்த அடிபட்டு சிற்றரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story