சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்


சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்
x

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடந்தது.

பெரம்பலூர்

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று மாலை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னபொண்ணு தலைமை தாங்கினார். போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு மாதர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அதன் அமைப்புகளை சேர்ந்தவர்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை போட்டு, அதனை பாடையில் வைத்து ஊர்வலமாக தூக்கி வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் சின்னை பாண்டியன் கண்டனம் தெரிவித்து பேசினார். பின்னர் மாதர் சங்கத்தினர் சமையல் கியாஸ் சிலிண்டரை சுற்றி வந்து ஒப்பாரி வைத்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டருக்கான உரிய மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

1 More update

Next Story