எண்ணும், எழுத்தும் திட்ட விழிப்புணர்வு பிரசாரம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்


எண்ணும், எழுத்தும் திட்ட விழிப்புணர்வு பிரசாரம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:15:24+05:30)

கடலூர் மாவட்டத்தில் எண்ணும், எழுத்தும் திட்ட விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

கடலூர்


கடலூர் பள்ளி கல்வித்துறை சார்பில் எண்ணும், எழுத்தும் "கற்றலை கொண்டாடுவோம்" பிரசார வாகனம் தொடக்க நிகழ்ச்சி மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நடந்தது.

இந்த பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்னன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா, உதவி திட்ட அலுவலர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகள் தங்களுடைய தனி திறன்களை வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த எண்ணும், எழுத்தும் மேடையில் வெளிப்படுத்தினர். குணா தலைமையிலான கலைக்குழுவினர் எண்ணும் எழுத்தும் பாடல்களை விழிப்புணர்வு மூலம் கலை நிகழ்ச்சியாக நடத்தினர்.

எண்ணும், எழுத்தும் விளக்க துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதில் வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர், வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டம் தன்னார்வலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி

இதை தொடர்ந்து, விழிப்புணர்வு பிரசார வாகனம் பண்ருட்டிக்கு சென்றடைந்தது. அங்கு ஸ் நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். அண்ணா கிராமம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் மோகன் முன்னிலை வகித்தார். நாட்டுப்புற கலைஞர் கலைக்குழு தலைவர் குணாளன் தலைமையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மதன்லால், வினோத்குமார், பாலமுருகன், அய்யப்பன் சுரேஷ், பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர் தேவகி, தமிழ்நாடு கல்வி பெலோஷிப் கோகுல கிருஷ்ணன், லோகேஸ்வர், கார்த்திகா, பிரமிளா மற்றும் தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், கலைஞர்கள் அருள்மொழி, துளசி, மணிமார்பன், தமிழ்மணி, அருள் ஜோதி, மனோன்மணி, அய்யப்பன், ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வடலூர்

வடலூர் பஸ் நிலையத்தில், நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதிலட்சுமி தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் இளங்கோ, ராஜேஷ்குமார், சண்முகம், முத்து கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கருங்குழி, பார்வதிபுரம், மேட்டுக்குப்பம் ஆகிய ஊர்களின் அரசு பள்ளி மாணவ, மாணவிகள், கல்வித் திறமைகளான, மேடையில் பேசுதல், பொம்மலாட்டம், மாறுவேடம், ஆகிய திறமைகளை வெளிப்படுத்தினார்கள், நிகழ்ச்சியில், வட்டார வளமையமேற்பார்வையாளர்கள், சீதா, மோகன், தலைமை ஆசிரியர்கள், அந்தோணி ஜோசப், மெட்டில்டா, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் வரதராஜன், எண்ணும் எழுத்து மாநில கருத்தாளர் லயோனா, மற்றும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்,

இதேபோன்று, விருத்தாசலம் கம்மாபுரம், புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், பூங்காக்கள் ஆகிய இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


Next Story