சத்துணவு ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பு தலைமை தாங்கினார். காலை உணவு திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்தி விட்டு அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தி திட்டம் சிறப்படைய உள்கட்டமைப்பு வசதியுடன் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும். தமிழக அரசின் நிரந்தர திட்டத்தில் பணியாற்ற கூடிய சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழு நேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ரூ.9 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சத்துணவு ஊழியர்கள் தங்களது சேலை முந்தானையில் மடியேந்திய படி கோரிக்கை தொடர்பான கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story