ஊட்டச்சத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
தியாகதுருகத்தில்ஊட்டச்சத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தியாகதுருகம்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் எழிலரசி, ராணி, தேவகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் உறுதி செய் உறுதி செய் ஊட்டச்சத்தை உறுதி செய், ஒழிப்போம், ஒழிப்போம் ரத்த சோகையை ஒழிப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாைககளை ஏந்தி சென்றனர். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. முன்னதாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊட்டச்சத்தை உறுதி செய்வது குறித்து மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். இதில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.