சென்னையில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை..!


சென்னையில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை..!
x
தினத்தந்தி 28 Sept 2023 6:06 PM IST (Updated: 28 Sept 2023 6:08 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக வேண்டாம் என்று சொல்லும் வரை அவர்களுடன் எங்கள் பயணம் தொடரும் என்று ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

1 More update

Next Story