பிரதமர் மோடிக்கு நன்றி- ஓ.பன்னீர்செல்வம் கடிதம்


பிரதமர் மோடிக்கு நன்றி-  ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
x
தினத்தந்தி 14 July 2022 8:44 AM GMT (Updated: 14 July 2022 9:23 AM GMT)

பூஸ்டர் டோஸ் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசம் என மத்திய அரசு தெரிவித்தது

சென்னை:

பூஸ்டர் டோஸ் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.தடுப்பூசி முகாம் ஜூலை 15ம் தேதி முதல் நடைபெறும்.நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஜூலை 15ம் தேதி முதல் செப். 28ம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலவச பூஸ்டர் டோஸ் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஓ. பன்னீர் செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

கொரோனாவை தடுக்க 18 வயதில் இருந்து 59 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி மையத்தில் நாளை முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை மனதார பாராட்டுகிறேன். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கொண்டாட்டத்தையொட்டி இத்திட்டத்தை அறிவித்து உள்ளது வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கை பொது மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். இது இந்திய மக்கள் குறிப்பாக ஏழைகள் மீது நீங்கள் வைத்து இருக்கும் மிகுந்த அக்கறை மற்றும் இரக்கத்தை காட்டுகிறது. அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இந்த அறிவிப்புக்கு அ.தி.மு.க சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்


Next Story