கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே சுரங்க நடைபாதை அமைப்பதில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் - கலெக்டர் தகவல்


கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே சுரங்க நடைபாதை அமைப்பதில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் - கலெக்டர் தகவல்
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர்- திருவாலங்காடு ரெயில் நிலையங்களுக்கு இடையே கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே சுரங்க நடைபாதை அமைக்கும் பணி சென்னை நெடுஞ்சாலைத்துறை மூலமாக நடைபெற உள்ளது.

எனவே இதுகுறித்து ஆட்சேபனை ஏதேனும் இருப்பின் இந்த அறிவிப்பு வெளியிட்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story