ஒடிசா- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்: தெற்கு ரெயில்வே தகவல்


ஒடிசா- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்: தெற்கு ரெயில்வே தகவல்
x

குர்தா ரோடு - பிரம்மாபூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒடிசா மாநிலம், குர்தா ரோடு - பிரம்மாபூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை (வியாழக்கிழமை) தாமதமாக புறப்படும்.

அதன்படி, புவனேஸ்வரில் இருந்து நாளை மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12830) 3 மணி நேரம் தாமதமாக மாலை 3.10 மணிக்கு புவனேஸ்வரில் இருந்து புறப்படும்.

இதேபோல் நாளை, மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06054) 2 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு சந்திரகாச்சியில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story