மெட்ரோ ரெயிலில் பயணிப்போருக்கு சலுகை - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில் மெட்ரோ ரெயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதம் முதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதம் முதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரியில் 25 லட்சத்து 19 ஆயிரம் பேரும் பிப்ரவரியில் 31 லட்சத்து 86 ஆயிரம் பேரும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் மாதத்தில் 44 லட்சத்து 67 ஆயிரம் பேரும் ஏப்ரலில் 45 லட்சத்து 46 ஆயிரம் பேரும் மே மாதத்தில் 47 லட்சத்து 87 ஆயிரம் பேரும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கியூஆர் கோடு மற்றும் பயண அட்டையை பயன்படுத்தி பயணிப்போருக்கு 20 சதவீத கட்டண சலுகை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story