தேவகோட்டை வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை


தேவகோட்டை வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 26 Jun 2023 7:07 PM GMT (Updated: 27 Jun 2023 11:31 AM GMT)

தேவகோட்டை வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன 100 மீன்களை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன 100 மீன்களை பறிமுதல் செய்தனர்.

வாரச்சந்தை

தேவகோட்டை கண்டதேவி சாலையில் உள்ள வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த வாரச்சந்தையில் தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் அதிக அளவில் மீன்களை வாங்கி செல்கின்றனர். சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, தேனி மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் இச்சந்தையில் வியாபாரம் செய்து வருகிறார்கள். சந்தையில் விற்கப்படும் மீன்களின் தரம் குறைந்து காணப்படுவதாக புகார் எழுந்தது.

100 கிலோ மீன்கள் பறிமுதல்

இதை தொடர்ந்து கலெக்டர் ஆஷா அஜீத் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்பு அதிகாரி பிரபாவதியிடம் வலியுறுத்தினார்.

இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் வாரச்சந்தையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது 100 கிலோ கெட்டு போன மீன்கள், 50 கிலோ தரம் குறைந்த கருவாடு, 50 கிலோ அழுகிய மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். மேலும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அபராதம் விதிக்கப்பட்டது


Next Story