சென்னை விமானநிலையம் வந்த குழந்தையின் கைப்பையை திறந்து பார்த்து மிரண்ட அதிகாரிகள்


சென்னை விமானநிலையம் வந்த குழந்தையின் கைப்பையை திறந்து பார்த்து மிரண்ட அதிகாரிகள்
x

கோப்புப்படம் 

இஸ்ரேல் நாட்டில் இருந்து சென்னை வந்த 5 வயது குழந்தையின் கைப்பையில் இருந்த துப்பாக்கி தோட்டாவால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து பெங்களூரூ செல்ல வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது குழந்தையின் கைப்பையில் இருந்து வெடி பொருள் இருப்பதற்கான அலாரம் ஒலித்தது. இதையடுத்து பையை சோதனை செய்ததில், அதனுள் வெடிக்காத ஒரு துப்பாக்கி குண்டு இருந்ததை கண்டு பிடித்த அதிகாரிகள், அந்த குண்டை பறிமுதல் செய்தனா்.


Next Story