சாலை விபத்தில் முதியவர் பலி


சாலை விபத்தில் முதியவர் பலி
x

சாலை விபத்தில் முதியவர் பலியானார்.

பெரம்பலூர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சேரானூரை சேர்ந்தவர் சேகர் (65). இவர் விழுப்புரம் மாவட்டம், பள்ளியம்பட்டு ஜானி பாஷா தெருவை சேர்ந்த அலிபாஷா(35) என்பவருடன் சரக்கு வாகனத்தில் கூலி வேலைக்கு பழங்கள் விற்க வந்தார். நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சின்னாறு ஏரி பக்கம் இயற்கை உபாதை செல்வதற்காக சேகர் சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்த வந்த கார் சேகர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மங்களமேடு போலீசார் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story