77-வது சுதந்திர தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பிரியா தேசியக்கொடி ஏற்றினார்


77-வது சுதந்திர தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பிரியா தேசியக்கொடி ஏற்றினார்
x
சென்னை

சென்னை,

77-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்கவிட்டார். இதனைத்தொடர்ந்து, தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதேபோல, அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர், சென்னை மாநகராட்சியில் அதிக சொத்துவரி செலுத்திய 3 நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும், முறையாக உரிய காலக்கெடுவிற்குள் சொத்துவரி செலுத்திய 3 சொத்து உரிமையாளர்களுக்கும் மேயர் பிரியா பாராட்டு கடிதங்களை வழங்கினார். மேலும், சென்னை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 128 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர்கள் சங்கர்லால் குமாவத், லலிதா, ஜி.எஸ்.சமீரன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், நிலைக்குழு தலைவர்கள் தனசேகரன், நே.சிற்றரசு மற்றும் மண்டலக் குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story