தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் மதுரையில் நாளை குறை தீர்க்கும் கூட்டம்


தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் மதுரையில் நாளை குறை தீர்க்கும் கூட்டம்
x

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் மதுரையில் நாளை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

மதுரை


தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் இந்த மாதத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம் நாளை(புதன்கிழமை) மதியம் 3.30 மணியளவில் மதுரை கே.கே.நகரில் உள்ள துணை மண்டல அலுவலகத்தில் நடைபெறும். இதில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை மதுரை துணை மண்டல இயக்குனர்(பொறுப்பு) சுரேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story