4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.இதனால் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று 4-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மீனவர்கள் கூறுகையில் இந்த கச்சன் காற்று (சூறைகாற்று) தொடர்ந்து ஒரு வாரம் வீசும். அதுவரை மீன்பிடிக்க செல்ல இயலாது. தற்போது அதிக அளவில் மத்தி மீன்கள் கிடைத்து வந்த நிலையில் சூறைகாற்றினால் மீன்பிடிக்க செல்லாததால்பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.


Next Story