சதுர்த்தியையொட்டி 250 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
விநாயகர் சதுர்த்தியையொட்டி தேனி மாவட்டத்தில் 250 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது என இந்து எழுச்சி முன்னணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தேனி
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது. தேனி நகர தலைவர் செல்வபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். நிறுவன தலைவர் பொன்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
இதில் மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட செயலாளர் சோலைராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது, கிழங்கு மாவு, காகிதக் கூழால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்தி அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story