ராகுல்காந்தியின் யாத்திரை ஓராண்டு நிறைவையொட்டி காரைக்குடியில், ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரசார் பேரணி

ராகுல்காந்தியின் யாத்திரை ஓராண்டு நிறைவையொட்டி காரைக்குடியில், ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரசார் பேரணி
x

ராகுல்காந்தியின் யாத்திரை ஓராண்டு நிறைவைெயாட்டி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரசார் பேரணி சென்றனர்.

சிவகங்கை

காரைக்குடி

ராகுல்காந்தியின் யாத்திரை ஓராண்டு நிறைவைெயாட்டி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரசார் பேரணி சென்றனர்.

காங்கிரசார் பேரணி

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை ஓராண்டு நிறைவானதையொட்டி பேரணி நடைபெற்றது. காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ராஜீவ் காந்தி சிலை வரை நடைபெற்றது.

இந்த பேரணிக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். பேரணியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி, மாங்குடி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

இதில் மாநில மகளிர் அணி துணைத்தலைவி ஸ்ரீவித்யா கணபதி, மாவட்ட மகளிர் அணி தலைவி இமயம் மடோனா, நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, மாநில வக்கீல் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ராமநாதன், கல்லல் ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமரேசன், சாக்கோட்டை வட்டார தலைவர்கள் செல்வம், கருப்பையா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரவீன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை நகர நிர்வாகி வக்கீல் சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story