மதுரை மாநாட்டையொட்டி அ.தி.மு.க.வினர் ராட்சத பலூன் பறக்கவிட்டு பிரசாரம்


மதுரை மாநாட்டையொட்டி அ.தி.மு.க.வினர் ராட்சத பலூன் பறக்கவிட்டு பிரசாரம்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:30 AM IST (Updated: 16 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாநாட்டையொட்டி பொள்ளாச்சி அருகே அ.தி.மு.க.வினர் ராட்சத பலூன் பறக்க விட்டு பிரசாரம் மேற்கொண்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

மதுரை மாநாட்டையொட்டி பொள்ளாச்சி அருகே அ.தி.மு.க.வினர் ராட்சத பலூன் பறக்க விட்டு பிரசாரம் மேற்கொண்டனர்.

ராட்சத பலூன்

மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி பிரசாரம் மேற்கொள்ள நேற்று முன்தினம் ராட்சத பலூன் பறக்க விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அனுமதி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பலூனை பறக்க விட்டார். இதில் கோ-ஆப்டெக்ஸ் மாநில தலைவர் வெங்கடாச்சலம், நிர்வாகிகள் ரகுபதி, விஜயகுமார், ஓ.கே.முருகன், ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம்

மாநாட்டையொட்டி பலூன் பறக்க விடுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. போராட்டம் நடத்தி தான் அனுமதி பெறப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வினர் மாநாடு, விழாக்களுக்கு பேனர் வைத்தால் போலீசார் அனுமதி கொடுப்பதில்லை. இதே தி.மு.க. அமைச்சர்கள் கோவை மாவட்டத்திற்கு வந்தால் அனுமதி இல்லாமல் வீதிகள் எல்லாம் பேனர் வைக்கின்றனர். பொள்ளாச்சியில் சொந்த இடத்தில் கூட பேனர் வைக்க விடுவதில்லை. மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று ஒட்டுமொத்த மக்களும் முடிவு செய்து விட்டனர்.

சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம், நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி என மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story