வீரன் சுந்தரலிங்கனார் நினைவுநாளை முன்னிட்டு உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


வீரன் சுந்தரலிங்கனார் நினைவுநாளை முன்னிட்டு  உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x

வீரன் சுந்தரலிங்கனார் நினைவுநாளை முன்னிட்டு, அவரது மணிமண்டபத்திலுள்ள உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

வீரன் சுந்தரனார் நினைவுநாளை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நினைவுநாள்

சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் 223-வது நினைவு நாள் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியிலுள்ள அவரது மணி மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவச்சிலைக்கு அவரது நேரடி வாரிசு பொன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அரசு சார்பில் வீரன் சுந்தரலிங்கனார் உருவ சிலைக்கு ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் ஆகியோர் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர். அப்போது வருவாய் ஆய்வாளர் கற்பகவல்லி, கிராம நிர்வாக அலுவலர் ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

வீரன் சுந்தரலிங்கனார் பேரவை

வீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பில் அவரது உருவ சிலைக்கு தலைவர் முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா

பா.ஜனதா சார்பில் வீரன் சுந்தரலிங்கனார் உருவ சிலைக்கு பா.ஜனதா தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ்சென்ன கேசவன் தலைமையில் கட்சியினர் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட துணைத்தலைவர் தங்கம்மாள், மாவட்ட விவசாய அணி செயலாளர் பேச்சி, மாநில விவசாய அணி திட்ட பொறுப்பாளர் தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய மாநில எஸ்.சி, எஸ்.டி அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கருப்பையா வீரன் சுந்தரலிங்கனார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலாளர் தேவேந்திரன் தலைமையில் தலைவர் சிவசுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாம் தமிழர் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மத்திய- மாநில அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் வீரன் சுந்தரலிங்கனார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story