ஓணம் பண்டிகை: மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஓணம் பண்டிகை: மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 29 Aug 2023 2:23 AM GMT (Updated: 29 Aug 2023 2:25 AM GMT)

ஓணம் பண்டிகையையொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஓணம் பண்டிகை என்பதால் கேரள மக்கள் மகிழ்ச்சியுடன் திருநாள் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்தும், சிறப்புத்தும், வருகிறார்கள்.

ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அந்தவகையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதையொட்டி சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக அனைவரையும் சமமாக பார்ப்போம். நாடு முழுவதும் ஒற்றுமையும் , சமத்துவமும் மீண்டும் உண்டாக வாழ்த்துகள் என மலையாளத்தில் பேசி முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.




Next Story