ஓணம் பண்டிகையை முன்னிட்டு மேலும் 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மேலும் 4 மாவட்டங்களில் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கேரளாவில் வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது மேலும் 4 மாவட்டங்களில் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story