காஞ்சீபுரத்தில் குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பியோடிய மேலும் ஒருவர் மீட்பு


காஞ்சீபுரத்தில் குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பியோடிய மேலும் ஒருவர் மீட்பு
x

காஞ்சீபுரத்தில் குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பியோடிய திருச்சியை சேர்ந்த சிறுமியை நேற்று முன்தினம் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் அருகே தாத்திமேடு சாலபோகம் பகுதியில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள், கல்வி நிலையை தொடர இயலாத குழந்தைகள் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர். இந்த காப்பகத்தில் குழந்தைகள், சிறுமிகள் என 29 பேர் உள்ளனர்.

இந்த நிலையில் இரவு பணியில் இருந்த பாதுகாவலரனின் அறையை தாழிட்டு விட்டு 6 சிறுமிகள் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 6 சிறுமிகளில் 5 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில் மீதமுள்ள திருச்சியை சேர்ந்த சிறுமியை நேற்று முன்தினம் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

1 More update

Next Story