சென்னை பாரிமுனையில் லிப்டில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!
சென்னை பாரிமுனையில் லிப்டில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை,
சென்னை பாரிமுனை லிங்குசெட்டி தெரிவில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த தனியார் நிறுவனத்தின் லிப்டில் சிக்கி கீமாராம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 4 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டடத்தின் சர்வீஸ் லிப்டில் பயணித்த கீமாராம், இரண்டாவது தளத்தில் வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வெல்டிங் மிஷின் மூலம் லிப்டை அறுத்து கீமாராம் உடலை மீட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story