ஊட்டி கோ-ஆப்டெக்சில் ரூ.1 கோடி விற்பனை இலக்கு


ஊட்டி கோ-ஆப்டெக்சில் ரூ.1 கோடி விற்பனை இலக்கு
x
தினத்தந்தி 28 Sep 2023 7:30 PM GMT (Updated: 28 Sep 2023 7:30 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி ஊட்டியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

தீபாவளி பண்டிகையையொட்டி ஊட்டியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

தள்ளுபடி விற்பனை

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பாரம்பரியமிக்க பட்டு ரகங்களான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை மென்பட்டு, திருபுவனம், ராசிபுரம் ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகளை காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

விற்பனை இலக்கு

புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி சேலைகள், இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் சேலைகள் உள்பட ஏராளமான ஜவுளி ரகங்கள் உள்ளன. அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டியில்லாத சுலப தவணையின் மூலம் கடன் விற்பனை உண்டு. மேலும் கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மூலம் அதிக வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.300 முதல் ரூ.3000 வரை மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணையும் வசதியும் உள்ளது.

இத்திட்டத்தில் 11 மாத தவணையை வாடிக்கையாளர்கள் செலுத்தி, 12-வது மாத முடிவில் மொத்த தொகைக்கும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விலையில் துணிகளை எடுத்துக்கொள்ளலாம். தீபாவளியை முன்னிட்டு ஊட்டியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் முதுநிலை மண்டல மேலாளர் நந்தகோபால், ஆர்.டி.ஓ.மகராஜ், மேலாளர் ஜெகநாதன், ஆய்வாளர் முருகன், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் ஷபீனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story