உதகை தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்காக ஒரு வாரம் விடுமுறை - மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்


உதகை தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்காக ஒரு வாரம் விடுமுறை - மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்
x

விடுமுறை அறிவித்தது குறித்து உரிய விளக்கமளிக்க பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் தலைமையில் தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ். உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த கூட்டம் நாளை வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடைபெறும் தனியார் பள்ளிக்கு ஒரு வார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முறையான அனுமதி இல்லாமல் தனியார் பள்ளி விடுமுறை அறிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, இது குறித்து உரிய விளக்கமளிக்க சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து தகுந்த விளக்கமளிக்காவிட்டால் பள்ளி நிர்வாகத்தின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Next Story