திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் புகார் மற்றும் தகவல் தெரிவிக்க திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (63799 04848 என்ற தொலைப்பேசி எண்) காவல் கட்டுபாட்டு அறை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கீழ் உதவி ஆய்வாளர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றசெயல்கள், போதைப்பொருட்கள் புழக்கம், மணல் கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்களை பற்றியும் தங்கள் புகார் தொடர்பாகவும் 63799 04848 எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தாங்கள் தெரிவிக்கும் தகவல்களை உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தருபவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story