சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்


சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

சேலம்

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது..

சிறப்பு பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழித்தடங்களில் 1,900 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முக்கிய பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

இதன்படி, வார இறுதி நாட்கள் மற்றும் வருகிற 23-ந் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சேலம் புதிய பஸ்நிலையம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னை-பெங்களூரு

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலை, ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சீபுரத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்துகழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

1 More update

Related Tags :
Next Story