பொதுமக்கள் வசதிக்காக 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்


பொதுமக்கள் வசதிக்காக 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

பொதுமக்கள் வசதிக்காக 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது

திருச்சி

தொடர் விடுமுறை எதிரொலியாக பொதுமக்கள் வசதிக்காக 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கிளை மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வருகிற 16, 17-ந் தேதி (சனி, ஞாயிறு) வார விடுமுறையையொட்டியும், 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டியும், பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சி, டெல்டா மாவட்டங்களுக்கும் 200 பஸ்கள்இயக்கப்படுகிறது. இதேபோல் திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கு 100 பஸ்கள் என கூடுதலாக வரும் 15, 16-ந் தேதிகளில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதேபோல் விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் திரும்புவதற்கு வசதியாக 18, 19-ந் தேதிகளில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. எனவே பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பயணிகள் www.tnstc.inஇணைய முகவரி மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Related Tags :
Next Story