மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு:முந்திரி தொழிற்சாலைகளை மூடி உற்பத்தியாளர்கள் போராட்டம்


மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு:முந்திரி தொழிற்சாலைகளை மூடி உற்பத்தியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பண்ருட்டி பகுதியில் தொழிற்சாலைகளை மூடி முந்திரி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

பண்ருட்டி,

மின்கட்டணம் உயர்வு

பண்ருட்டி பகுதியில் சிறு, குறு தொழிற்சாலைகள், குடிசைத்தொழில்கள் போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலமாக முந்திரி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தொழிற்சாலைகளுக்கு இரு மடங்காக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், முந்திரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து நேற்று ஒரு நாள் அடையாளமாக, முந்திரி பதப்படுத்தும் பணிகளை நிறுத்திட முடிவு செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

அதன்படி, நேற்று பண்ருட்டி பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட முந்திரி தயாரிப்பு தொழிற்சாலைகள், அதனை சார்ந்த சிறு, குறு, தொழில்நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தொடர்ந்து அவர்கள் பண்ருட்டி பஸ் நிலையம் அருகில் இந்திராகாந்தி சாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முந்திரி சங்க தேசிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கம் தலைவர் மலர் வாசகம், பொருளாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான முந்திரி ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சிறு, குறு உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.


Next Story