தமிழகத்திற்கு வரும் 8 ஆம் தேதி 'ஆரஞ்சு' அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. கடந்த மாதம் முதல் வாரம் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறியது. சென்னையில் மிக கனமழையை கொடுத்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழையை கொடுத்தது. இதையடுத்து தமிழகத்தில் பெரிதாக மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் தான் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வங்கக் கடலில் டிசம்பர் 8ம் தேதி புயலாக உருவாக வாய்ப்பு 3 நாட்கள் பின் இது புயலாக மாற உள்ளது. வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது.
இதனால் தமிழகத்தில் வரும் 8ந் தேதி கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழத்திற்கு வரும் 8ந் தேதி ஆரஞ்சு அலெர்ட் கொடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.