தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்....! அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்!


தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்....! அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்!
x
தினத்தந்தி 1 Nov 2022 4:36 AM GMT (Updated: 1 Nov 2022 5:08 AM GMT)

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.

சென்னை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களை சார்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது.

இதன் எதிரொலியால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புகள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த 3 மணி நேரம் மழை மிக உக்கிரமாக இருக்கும்என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இன்று அதிகாலையில் இருந்தே இந்த மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக கத்திப்பாரா சுரங்கப்பாதையில் மழை நீர் குளம் போல் தேங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை முதல் கனமழை வெளுத்து வாங்குகிறது.

இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ள நிலையில், சென்னை கத்திப்பாரா சுரங்கப்பாதையில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை அமைந்திருக்கும் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது.

தண்டையார்பேட்டை மாநகராட்சி 4வது மண்டலத்துக்குட்பட்ட சி‌.பி .ரோடு ஜே. ஜே. நகர் மணலி சாலையில் அதிகாரிகளுடன் சென்னை மேயர் ப்ரியா ஆய்வில் ஈடுபட்டார்.

சென்னை திரு.வி.க. நகரில், நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் சன்செட் இடிந்து விழுந்ததில் காய்கறி வியாபாரி சாந்தி உயிரிழந்தார்.

சென்னை மாநகராட்சி பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதாக இதுவரை 154 புகார்கள் வந்துள்ளன. 21 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

50க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது

25 இடங்களில் மரம் விழுந்த நிலையில் 17 இடங்களில் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது.


Next Story