நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு


நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு
x

நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து 150 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல்லை,

திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் கொடுமுடியாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 52.50 அடி ஆகும். தற்போது இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நீர் வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருக்குறுங்குடி கிராமம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பிசான பருவ சாகுபடி செய்ய 03.11.2023 முதல் 31.03.2024 வரை 150 நாட்களுக்கு, நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் பாசன பருவகாலத்தின் மொத்த தண்ணீர் தேவை அளவான 963.49 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், என்று கூறப்பட்டுள்ளது.


Next Story