கருமுட்டை விற்பனை விவகாரம்: 4 பேர் கைது மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது..!


கருமுட்டை விற்பனை விவகாரம்: 4 பேர் கைது மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது..!
x

ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு,

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறுமியின் தாய் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதுதொடர்பாக ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதுவிசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் போலீசார் மற்றும் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் தலைவர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், கருமுட்டை விற்பனை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சிறுமியின் தாய் சுமையா, இடைத்தரகர் மாலதி உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story