மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிப்பு


மாநிலங்களவை தேர்தல்:  காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிப்பு
x

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ப.சிதம்பரம் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடக்க உள்ளது. தமிழகத்தில் திமுக 3 இடங்களுக்கும், அதிமுக 2 இடங்களுக்கும் போட்டியிடுகின்றன. ஒரு இடத்தை காங்கிரசுக்கு திமுக வழங்கியுள்ளது.

அந்த ஒரு இடத்தை பெற தமிழக காங்கிரஸில் கடும் போட்டி நிலவியது. இது தொடர்பாக அக்கட்சியில் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் நிதி அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ப.சிதம்பரம் நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.


Next Story