18 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு


18 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு
x

செம்பனார்கோவில் வட்டாரத்தில் 18 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பையா கூறினார்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்;

செம்பனார்கோவில் வட்டாரத்தில் 18 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பையா கூறினார்.

இடுபொருட்கள்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருள் மற்றும் விவசாய கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பையா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு உளுந்து, பயறு, பருத்தி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பேட்டரி கைத்தெளிப்பான், களை எடுக்கும் எந்திரம் உள்ளிட்டவற்றை மானிய விலையில் வழங்கினார்.அப்போது அவர் கூறியதாவது

18 ஆயிரம் ஏக்கர்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் 18 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 80 சதவீதம் திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு எந்திரம் மூலம் குறுவை நடவு பணி நடைபெற உள்ளது. திருக்கடையூர், ஆக்கூர், பொறையாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் குறுவை சாகுபடிக்கு கோ 51, ஆடுதுறை 43 ஆகிய நெல் ரகங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது.

மானிய விலையில்

இந்த நெல் ரகங்கள் 50 சதவீதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் விதைகளை வாங்கி பயன்பெறலாம் மேலும் தேவையான உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் கையிருப்பில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story