கோவில் குளத்தில் மூழ்கி பெயிண்டர் சாவு - புனரமைப்பு பணியில் ஈடுபட்டபோது நேர்ந்த சோகம்


கோவில் குளத்தில் மூழ்கி பெயிண்டர் சாவு - புனரமைப்பு பணியில் ஈடுபட்டபோது நேர்ந்த சோகம்
x

திருவள்ளூர் அருகே புனரமைப்பு பணியில் ஈடுபட்டபோது, கோவில் குளத்தில் மூழ்கி பெயிண்டர் பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு கிராமத்தில் சிங்கீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவில் புனரமைப்பு செய்து வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சிதம்பரத்திலிருந்து பெயிண்டர் ரவி (வயது 40) உள்பட 20-க்கும் மேற்பட்டோர் தங்கி கோவில் கோபுர கலசத்திற்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவி கோவில் அருகே உள்ள குளத்தில் குளிக்கச் சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இறந்த ரவி உடலை, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவரது சாவு குறித்து விசாரித்து வருகிறார்கள்.

அதேபோல் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் சகாயமாதா தெருவை சேர்ந்தவர் ஆண்டனி. இவரது மனைவி பிரான்சிஸ் ரெஜினா (84). இவர் நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகே உள்ள பிஞ்சிவாக்கம் கண்டிகை பகுதியில் உள்ள குளத்தில் கால் கழுவுவதற்காக சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பிரான்சிஸ் ரெஜினா உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது சாவு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

1 More update

Next Story