மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி - வீட்டு உரிமையாளர் காயம்


மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி - வீட்டு உரிமையாளர் காயம்
x

பூந்தமல்லி அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலியானார். இதில் வீட்டு உரிமையாளர் பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி, தந்தை பெரியார் நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 45). மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். தற்போது புதிய வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று சென்னை அசோக் நகரை சேர்ந்த விஸ்வநாதன் (46) வீட்டின் முதல் மாடியில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் அவரது கை உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட விஸ்வநாதன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அருகில் இருந்த முத்துராமன் பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story