குளுந்தாளம்மன் கோவிலில் சித்திரை திருவிழா


குளுந்தாளம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
x

குளுந்தாளம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி

புள்ளம்பாடியில் குளுந்தாளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந்தேதி மறுகாப்புகட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் இரவு அன்னவாகனத்தில் அம்மன் வீதிஉலா வந்தார். தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 3-ந்தேதி அன்று காலை 10 மணியளவில் தேரோட்டமும், 4-ந் தேதி இரவு 10 மணியளவில் சாமி தங்கபல்லக்கில் கிராமத்தின் முக்கியவீதிகள் வழியாக திருவீதி உலாவும் நடைபெறும். தொடர்ந்து 6-ந் தேதி சாமி மதியம் குடிபுகுதல் நிகழ்வும் நடைபெறும்.விழாவையொட்டி தினசரி ஆன்மிக சொற்பொழிவு, சிறப்பு நாதஸ்வரம் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


Next Story