பண்டைய காலத்தில் தானியங்களை சேமிக்க பயன்படுத்தப்பட்ட 'பண்டக்குழி' - திருச்சியில் கண்டுபிடிப்பு
பண்டைய காலத்தில் தானியங்களை சேமிக்க பயன்படுத்தப்பட்ட ‘பண்டக்குழி’ கண்டறியப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே காவேரிப்பாளையம் கிரமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது வயலில் டிராக்டர் மூலமாக உழுது கொண்டிருந்தபோது, இரும்பு கலப்பையில் பெரிய பாறாங்கல் ஒன்று சிக்கி பெயர்ந்து வந்துள்ளது.
அதை அகற்றிப் பார்த்த போது அந்த இடத்தில் சுமார் 10 அடி ஆழம் கொண்ட குழி தென்பட்டது. இதைப் பற்றி நிலத்தின் உரிமையாளர் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் அந்த குழியை ஆய்வு செய்தனர்.
அப்போது அது பண்டைய காலத்தில் தானியங்களை சேமிக்க பயன்படுத்தப்பட்ட 'பண்டக்குழி' என்பது கண்டறியப்பட்டது. இது எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story