பண்ருட்டி ஒன்றியக்குழு கூட்டத்துக்கு கருப்பு முகமூடி அணிந்து வந்த கவுன்சிலரால் பரபரப்பு
பண்ருட்டி ஒன்றியக்குழு கூட்டத்துக்கு கருப்பு முகமூடி அணிந்து வந்த கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி,
பண்ருட்டி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் சபா. பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் தேவகி ஆடலரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேலாளர் ஜெயசீலன், பொறியாளர், அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 11-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் மேலிருப்பு தனபதி கருப்பு முகமூடி அணிந்து கலந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வார்டு பகுதியில் உள்ள மக்கள் குறைபாடுகளை தீர்க்க அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் கருப்பு முகமூடி அணிந்து கலந்து கொண்டேன் என்று தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.