முன்பணம் செலுத்திய பெற்றோர்: தர மறுத்த பள்ளி நிர்வாகம் - வட்டியுடன் திருப்பித் தர கோர்ட்டு உத்தரவு


முன்பணம் செலுத்திய பெற்றோர்: தர மறுத்த பள்ளி நிர்வாகம் - வட்டியுடன் திருப்பித் தர கோர்ட்டு உத்தரவு
x

முன்பணமாக செலுத்திய ரூ.40 ஆயிரத்தை 12 சதவீத வட்டியுடன் ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை,

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் சேர மாணவர் ஒருவர் ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்தியிருந்த நிலையில் அவர் பள்ளியில் சேராததால் கட்டணத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்குமாறு கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை போத்தனூரில் இயங்கி வரும் அந்த பள்ளியில் மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த சுதா மகேஷ் என்பவர் தனது மகனை 11-ம் வகுப்பில் சேர்ப்பதற்காக கல்வி கட்டணமாக ரூ.40 ஆயிரம் செலுத்தி உள்ளார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக தன் மகனை அந்தப் பள்ளியில் சேர்க்க முடியாமல் போனதால், முன்பணமாக செலுத்திய ரூ.40 ஆயிரத்தை தனியார் பள்ளி நிர்வாகத்திடம் சுதா மகேஷ் திருப்பி கேட்டுள்ளார்.

ஆனால் பள்ளி நிர்வாகம் பதில் அளிக்க மறுத்ததால், கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் சுதா மகேஷ் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி நாராயணன், சுதா மகேஷிற்கு ரூ.40 ஆயிரத்தை 12 சதவீத வட்டியுடன் ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.


Next Story