2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்: ஒற்றுமையுடன் நின்றால் வெற்றி உறுதி- கி.வீரமணி அறிக்கை
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஓரணியில் ஒற்றுமையுடன் நின்றால் வெற்றி உறுதி என்று வீரமணி தெரிவித்தார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் பெரும் பெரும் கப்பல் துறைமுகங்கள் அதானிகள் கையில் இருப்பது குறித்தும், அவர்களுக்காக தனி முதலாளிகள் சட்டம் திருத்தப்பட்டு, அவர்களுக்குத் தனிச் சலுகைகள் அளிக்கப்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார்.
ஆனால் அந்தக் கேள்விகள் எதற்கும் பதில் இல்லை. பிரதமர் நரேந்திரமோடி அளித்த பதில்களும் பொத்தாம் பொதுவில் தத்துவ உரைகளாகவே இருந்தன. மக்கள் கைபிசைந்து நிற்கும் நிலையில், உரிய பதிலளிக்காமல் மத்திய அரசு மவுன சாமியாராக உள்ளது. இதனை எதிர்க்கட்சித் தலைவர்கள் உணர்ந்து ஒற்றுமையுடன் ஓரணியில் நின்றால், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி உறுதி" என்றார்.
Related Tags :
Next Story